News May 17, 2024
செங்கல்பட்டு: மழைக்கு வாய்ப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் செங்கல்பட்டில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 17, 2026
மாமல்லபுரம்: பொங்கல் நாளில் பெரும் சோகம்!

மாமல்லபுரத்தில், நேற்று (ஜன.16), கல்லூரி மாணவர்கள் இருவர் சுற்றுலா வந்த நிலையில் மாலை, கடற்கரையில் குளிக்க சென்றனர். அப்போது மாணவர்கள் இருவரும் எதிர்பாரத விதமாக ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். இதனையடுத்து ஒருவரின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், மற்றொரு மாணவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News January 17, 2026
தாம்பரம் அருகே கொடூர கொலை!

திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ரீனாவும் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளனர். மேலும் ரீனாவின் தோழி ரஜிதா என்பவரிடம் செல்வகுமார் பழகியுள்ளார். இந்நிலையில் ரீனா (ம) ரஜிதா வேறொரு ஆண் நண்பருடன் பழகி வந்துள்ளனர். இதனை தட்டிக் கேட்ட செல்வகுமாரை 17 வயது சிறுவனுடன் சேர்ந்து இருவரும் கொடூர முறையில் கொலை செய்தனர். இது தொடர்பாக நேற்று 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
News January 17, 2026
செங்கை: இளம்பெண்ணை ஏமாற்றிய மருத்துவர்!

தாம்பரம், நெடுங்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர் ராம்கி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. இந்த நிலையில், தனக்கு திருமணமானதை மறைத்து, உடன் வேலை செய்யும் சக மருத்துவரை காதலிப்பதாகக் கூறி அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில், ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்கியைச் சிறையில் அடைத்தனர்.


