News March 25, 2026
அதிமுக கூட்டணியில் ‘புத’ இல்லை.. முடிவை அறிவித்தார்

புதிய தமிழகம்(புத) கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை என EPS அறிவித்துள்ளார். அவருடன் தாங்கள் தற்போது பேச்சுவார்த்தை நடத்தவில்லை; இனி கூட்டணியில் இணையவும் வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ணசாமியுடன் தவெக மற்றும் சசிகலா தரப்பு தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கட்சிகளில் அவர் மட்டுமே கூட்டணி முடிவை அறிவிக்காமல் உள்ளார்.
Similar News
News April 4, 2026
தஞ்சை: வாக்காளர் விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி அறிவிப்பு

தஞ்சை மாவட்டத் தேர்தல் பிரிவு சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. 100% நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி, 30-60 விநாடி வீடியோக்களை 08.04.2026-க்குள் லிங்க் 9489129765 என்ற எண்ணிற்கு அனுப்பி போட்டியில் பங்கேற்கலாம். சிறந்த பதிவுகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 4, 2026
BREAKING: தங்கம் விலை கிராமுக்கு ₹100 உயர்வு!

சென்னையில், தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக சவரனுக்கு ₹800 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் இன்று(ஏப்.4) 1 கிராம் ₹13,950-க்கும், சவரன் ₹1,11,600-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் இந்த வாரம் தங்கம் விலை ஏறுமுகத்தை கண்டதன் எதிரொலியே நம்மூரில் கடந்த 2 நாள்களில் சவரனுக்கு ₹1,600 உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.
News April 4, 2026
மீண்டும் இந்தியை திணிக்க முயற்சி: ஸ்டாலின்

CBSE-யில் 6-ம் வகுப்பு முதல் 3-வது மொழி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, இந்தியை திணிக்கும் முயற்சி என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த அணுகுமுறை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது, திணிக்கப்பட்ட ஒருமைப்பாட்டில் அல்ல என சாடினார். மேலும், இந்தி திணிப்புக்கு எதிராக அதிமுக குரல் கொடுக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்.


