News May 17, 2024

ராயப்பேட்டை அருகே சிறுமி கர்ப்பம்

image

ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டில் உள்ள திரவத்தை எடுத்து குடித்துள்ளார். வாந்தி பேதி எடுக்கவே ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற சிறுமியை பரிசோதித்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. பின் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யப்பட்டது. சென்னை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் புகாரின் பேரில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 12, 2026

JUST IN: சென்னையில் பிரபல ரவுடி படுகொலை!

image

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதியை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியை ரவுடி ஆதி பார்க்க மருத்துவமனைக்கு வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றது. போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 12, 2026

சென்னை: மாணவி தலை மீது பஸ் ஏறி பலி!

image

சைதாப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேவசேனா (21), நந்தனத்தில் உள்ள தனது தந்தையைப் பார்த்துவிட்டு மொபட்டில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மாநகரப் பேருந்து மோதியதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பேருந்து சக்கரம் ஏறியது. தலைக்கவசம் அணிந்திருந்தும், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 12, 2026

சென்னையில் இன்று முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை

image

சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் குளிர்சாத வசதியுடன் மின்சார டபுள் டெக்கர் பேருந்து சேவை மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அடையாறு முதல் மாமல்லபுரம் வரையிலான சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.01.2026) தொடங்கி வைக்கிறார். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, சென்னை அழகை பார்த்து ரசிப்பதற்கும் வசதியாக இருக்கும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!