News May 17, 2024

வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்டறியும் AI

image

யானை உள்ளிட்ட வன விலங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில், அவற்றின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்ட AI சோதனை கேரளாவில் வெற்றி பெற்றுள்ளது. நிலத்தில் புதைக்கப்பட்ட கருவி, நில அதிர்வு மூலம் விலங்குகளின் நடமாட்டத்தை கண்டறியும் முதல்கட்ட சோதனை பாலக்காட்டில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 11, 2025

அணு ஆயுத போருக்கே அஞ்ச மாட்டோம்.. PAK-க்கு IND பதிலடி

image

அணு ஆயுத போருக்கே அஞ்சாத தங்களுக்கு அண்டை நாட்டில் இருந்து மிரட்டல் விடுக்க வேண்டாம் என பாக்.,க்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு 2-வது முறையாக USA சென்றுள்ள பாக்., ராணுவ தளபதி ஆசிம் முனீர், காஷ்மீர் பாகிஸ்தானின் நாடி நரம்பு எனவும், சிந்து நதிக்கு இடையே IND அணை கட்டினால் தகர்ப்போம் என்றும் பேசினார். USA உதவியுடன் நீங்கள் ஆட வேண்டாம் எனவும் இந்தியா வார்னிங் கொடுத்துள்ளது.

News August 11, 2025

மழைக்காலத்தில் காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள்

image

☛நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் குடியுங்கள். ☛ஓட்டல் உணவுகளை தவிருங்கள். ☛குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் உட்கொள்வதை தவிருங்கள். ☛சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தால் சளி பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம். ☛தெருவில் விற்கும் உணவுகள், நீண்ட நாள் ஆன திண்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. ☛நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு, ஆடாதோடை இலை போன்றவற்றில் கஷாயங்களை எடுப்பது நல்லது. SHARE IT.

News August 11, 2025

இனி படிப்பது ரொம்ப ஈசி.. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

image

மாணவர்கள், ஆசிரியர்களுக்காக புதிய சமுதாய வானொலி நிலையத்தை CBSE தொடங்கவுள்ளது. ஏற்கனவே ‘ஷிக்‌ஷா வாணி’ பாட்காஸ்ட் மூலம் பாடங்கள் ஆடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், NCERT பாடத்திட்டத்தின்படி, பாடங்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளன. புதிய வானொலி நிலையம் தொடங்கப்பட்டதும், மாணவர்களின் கற்றலை மேலும் எளிதாக்கும் வகையில் பாடங்கள் ஒளிபரப்பாகும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மாணவர்களே ரெடியா..!

error: Content is protected !!