News May 17, 2024
ஆண்டுக்கு ஒரு பிரதமர் தேவையில்லை

இந்தியாவுக்கு வலிமையான பிரதமர் வேண்டும்; ஆண்டுக்கு ஒரு பிரதமர் தேவையில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். பிஹாரில் பேசிய அவர், “INDIA கூட்டணி எப்படியும் ஆட்சியை பிடிக்க போவதில்லை. இருந்தாலும் ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். மம்தா, ஸ்டாலின், கெஜ்ரிவால் இவர்களில் யார் பிரதமர்? அவர்கள் பிரதமர் பதவியை ஆண்டுக்கு ஒருவர் வீதம் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்” என்றார்.
Similar News
News November 4, 2025
கோவை கொடூரத்திற்கு போதை கலாசாரமே காரணம்: வைகோ

கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த சம்பவம் ஒரு கொடூர நிகழ்வு என வைகோ தெரிவித்துள்ளார். தாங்கொணாத் துயரத்தை ஏற்படுத்தும் இத்தகைய குற்றங்களுக்கு மதுப்பழக்கமும், போதை கலாசாரமுமே அடிப்படையாக இருக்கின்றன என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவருக்கும் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 4, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 4, ஐப்பசி 18 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 PM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
News November 4, 2025
Sports Roundup: ரஞ்சியில் தமிழகம் தொடர்ந்து சொதப்பல்

*இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து டிராவிஸ் ஹெட், சீன் அபோட், தன்வீர் சங்கா விடுவிப்பு. *SA அணிக்கு எதிரான 2-வது அன்அபிசியல் டெஸ்டில் குல்தீப் யாதவ் விளையாடவுள்ளார். *விதர்பாவுக்கு எதிரான ரஞ்சி போட்டியின் முதல் இன்னிங்ஸில் தமிழகம் 210 ரன்கள் பின்தங்கியுள்ளது. *அமெரிக்காவுக்கு எதிரான ODI-ல் UAE 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 243 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி.


