News May 17, 2024

புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகுகள் 5.6.2024, 6.6.2024 தேதிகளில் சிறப்பு குழுக்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது, படகு உரிமையாளர்கள் ஆதார் அட்டை , படகு பதிவு சான்றிதழ், டீசல் மானிய அட்டை, குடும்ப அட்டை, மீன் வளத்துறை மூலம் வழங்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை ஆய்வுக்குழு வசம் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

Similar News

News July 6, 2025

புதுக்கோட்டை: விவசாயிகளுக்கு ரூ.3,000 ஓய்வூதியம்

image

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News July 6, 2025

புதுக்கோட்டையில் ஆதார் சிறப்பு முகாம்

image

புதுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் 30 துணை அஞ்சலகங்களிலும் வரும் 16ஆம் தேதி வரை மெகா ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம் தபால் அலுவலகங்களில் மட்டுமல்லாமல் பள்ளிகள், கல்லூரிகள், ஊராட்சிகள் மற்றும் ஆதார் முகாம் தேவைப்படும் முக்கிய இடங்களில் தபால் துறை சார்பில் நடத்தப்பட உள்ளது.

News July 6, 2025

புதுக்கோட்டை: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உள்ள IT Officer (203), Marketing Officer (350) உட்பட “1007” காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இங்கே<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ. 48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!