News May 17, 2024
ஒருங்கிணைந்த பாடங்களுக்கு சேர்க்கை

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய கல்வி ஆண்டிற்கான ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல் பாடப் பிரிவு மற்றும் வணிகவியல் மருந்தாக்கவியல் பாடப் பிரிவுகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கு கடைசி நாள் வருகிற 22ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
களக்காடு தலையணையில் குளிக்க அனுமதி

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் தலையணை உள்ளது.
கடந்த வாரம் வரை நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் தலையணையில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று ( நவ.1) முதல் தடை விளக்கப்பட்டு பயணிகள் தலையணையில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
News November 2, 2025
நெல்லையில் போலீசார் அதிரடி இடமாற்றம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் போலீஸ் டிஎஸ்பி சதீஷ்குமார் தர்மபுரிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் நெல்லை மாநகர நுண்ணறிவு போலீஸ் உதவி கமிஷனர் கதிர்லால் சிவில் சப்ளை சிஐடி பிரிவு மயிலாடுதுறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
News November 2, 2025
நெல்லை: இனி வெளிநாட்டில் வேலை பெறலாம்

தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10, +2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ மற்றும் பாலிடெக்னிக் டிப்ளமோ மாணவர்கள், வேலையில்லாத இளைஞர்கள் www.nationalskillacademy.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். படிப்புகளை முடித்த பிறகு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறலாம்.


