News May 17, 2024
விழுப்புரம்: நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை கீழ்காணும் இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 முதல் 10 மணி வரை: வண்டிமேடு, முத்தோப்பு, சேவியர் காலனி, சென்னை மெயின்ரோடு, மேல்தெரு, மந்தக்கரை, சித்தேரிக்கரை, விராட்டிக்குப்பம் சாலை, கே.வி.ஆர். நகர், செஞ்சி சாலை, திருவாமாத்தூர். காலை 9 முதல் 11 மணி வரை: நவமால்காப்பேர், நவ மால்மருதூர், கண்டமங்கலம், பள்ளித்தென்னல்.
Similar News
News October 30, 2025
வளத்தி:பைனான்சியர் கடத்தல் வழக்கு: இருவர் கைது!

விழுப்புரம் மாவட்டம் வளத்தி பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் சிவா என்பவர் நேற்று அக்.28 (செவ்வாய்க்கிழமை) கடத்தப்பட்ட வழக்கில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கணேசமூர்த்தி, வைரமுத்து ஆகிய இருவரை விழுப்புரம் மாவட்ட போலீசார் இன்று அக்.29 (புதன்கிழமை) கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நபர்களை தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
News October 29, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.29) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
விழுப்புரம் காவல்துறை அதிரடி சோதனை!

விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் கடந்த 10 நாட்களாக போதைப் பொருளுக்கு எதிராக பல்வேறு அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சோதனையில் கடந்த 10 நாட்களில் 1841 புதுச்சேரி மது பாட்டில்கள், 285 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் மற்றும் 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று(அக்29) தெரிவிக்கப்பட்டுள்ளது.


