News May 17, 2024
கோடை பண்பாட்டு பயிற்சி முகாம்!!

மதுரை ஹார்விபட்டி சுவாமி விவேகானந்தர் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கோடை பண்பாட்டு பயிற்சி முகாம் இளைய பாரதம் சேவா அறக்கட்டளை சார்பில் வரும் மே 24 முதல் 26 வரை நடக்கவுள்ளது. இதில், வேத கணிதம், பேச்சுப் பட்டறை, ஓவியம் வரைதல், தனிநபர் ஆளுமைத் திறன் பயிற்சி, யோகா, தியானம், களப்பயணம், விளையாட்டு, உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
Similar News
News September 12, 2025
ரயில் பாதைகள் மின்சார பாதைகளாக மாற்றம்

மதுரை கோட்டத்தில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் பிரிவு தவிர மற்ற அனைத்து ரயில் பாதைகளும் ஏற்கனவே மின்மயமாக்கப்பட்டுவிட்டன. ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் பாதையை மின் மயமாக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த புதிய மின் பாதையில் நாளை (செப் 13) முதன்மை தலைமை மின்சார பொறியாளர் கணேஷ் ஆய்வு நடத்த இருப்பதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.
News September 12, 2025
எடப்பாடி பழனிசாமி மதுரை வருகை

மதுரை திருமங்கலம் தொகுதி அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் தாயார் மீனாள் அம்பாள் மறைவையொட்டி அவரது திருவுருவப் படத்தை நாளை மறுநாள் (செப்.14) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திருமங்கலம் அருகே உள்ள குன்னத்தூர் அம்மா கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்து வருகின்றனர்.
News September 12, 2025
மதுரையில் திருநங்கை திடீர் தற்கொலை..!

மதுரை அஹிம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை இசக்கிமுத்து (எ) தீபிகா 29. இவர் சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார். அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்லும் இசக்கிமுத்து (எ) தீபிகா நேற்று வீட்டிற்கு வந்தபோது சரிவர யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். அடுத்த சிறிது நேரத்தில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.