News May 17, 2024
பாஜக வெற்றி பெற பிளான் B இருக்கிறது: அமித் ஷா

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையை எட்டாத பட்சத்தில் தங்களிடம் பிளான் B இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், பிளான் A வெற்றி பெற 60%க்கும் குறைவான வாய்ப்புகளே இருக்கும் போதுதான் பிளான் B-ஐ பயன்படுத்துவோம் எனவும், ஆனால் அதற்கான தேவை ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார். பிளான் B என்னவாக இருக்குமென நினைக்கிறீர்கள்?
Similar News
News December 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை ▶குறள் எண்: 562 ▶குறள்: கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். ▶பொருள்: குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

இந்திய டி20 அணியின் கேப்டனாகிறாரா பும்ரா?

NZ-க்கு எதிரான டி20 தொடர் & டி20 உலகக் கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக உள்ளார். இதற்கு பிறகு, டி20 அணியின் கேப்டனாக பும்ராவை நியமிக்கவுள்ளதாக BCCI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ரோஹித் சர்மாவுக்கு பிறகு ODI, டெஸ்ட் கேப்டனாக பும்ராவை நியமிக்கவே அதிக வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அவர் காயம் காரணமாக அடிக்கடி வெளியேறியதால் கில் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.