News May 17, 2024
தேனி: காவல் ஆய்வாளர் திடீர் மரணம்

தேனி மாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்தவர் காவல் ஆய்வாளர் நடேசன். இவர் தனது சொந்த ஊர் சீலையம்பட்டியில் புதிய வீடு கட்டி புதுமனை புகுவிழா வைத்திருந்தார். இந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். திடீரென உயிரிழந்த காரணத்தால் அப்பகுதி சீலையம்பட்டி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News October 17, 2025
குச்சனூரில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

தேனி அருகே உள்ள குச்சனூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற அக்.18ம் தேதி முகாம் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். அதனால் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் தவறாமல் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளனர்.
News October 16, 2025
தேனியில் தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தேனியில் அக். 19, 20, 21ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News October 16, 2025
தேனி மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..? இத பண்ணுங்க

தேனி மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!.