News May 17, 2024
கற்போம் திட்டம்: மாணவர்களுக்கு வாய்ப்பு

“தொடர்ந்து கல்வி கற்போம்” திட்டத்தின்கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத, பள்ளி படிப்பை பாதியில் முடித்த மாணவர்கள் விவரம் நெல்லை மாவட்டத்தில் கணக்கெடுக்கப்பட்டது. இதில் சுமார் 2000 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் தொடர்ந்து கல்வி கற்போம் திட்டத்தில் சேர்ந்து பயனடைய பாளை மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தேவையான சிறப்பு பயிற்சி அளித்து துணைத்தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
Similar News
News August 5, 2025
நான்கு பேர் மீது குண்டாஸ்.. நெல்லை ஆட்சியர் உத்தரவு

அம்பை முடபாலத்தைச் சேர்ந்த முகேஷ் (20), சுனில் ராஜ் (19), முத்து (21), கணேசமூர்த்தி (22) ஆகியோர் கல்லிடைகுறிச்சியில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, பொது சொத்து சேதம் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர். அம்பை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வேண்டுகோளின்படி, மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையால், கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டார்.
News August 5, 2025
JOB ALERT: நெல்லை கூட்டுறவு வங்கியில் வேலை

நெல்லை இளைஞர்களே, அனைத்து வகையான கூட்டுறவு வங்கித் துறையில் 1000க்கும் மேலான உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். நெல்லைக்கு குறிப்பிட்ட அளவு காலியிடங்கள் உள்ளன. ஆக. 6 முதல் ஆக. 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு <
News August 5, 2025
நெல்லையில் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் நேற்று அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அரசு சார்பில் தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுனர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண்கள் ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். இதற்கு www.tnuwwb.tn.gov.in என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெருமாள்புரத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை அணுகலாம். SHARE IT