News May 17, 2024

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாள்கள், சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 555, நாளை 645, நாளை மறுநாள் 280 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News December 19, 2025

BREAKING: தமிழ் சினிமா நடிகர் அதிரடி கைது

image

ரேஷன் கடை ஊழியர்களை தாக்கிய வழக்கில் பிரபல வில்லன் நடிகர் பிரதீப்பை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை வீரராகவன் தெருவில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களான கலையரசன், டேனியலை மதுபோதையில் இருந்த பிரதீப் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த கலையரசன், டேனியல் இருவரும் ஸ்டான்லி ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர். பிரதீப் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

News December 19, 2025

சொல்லிக் கொடுத்ததை பேசும் விஜய்: திருமாவளவன்

image

தலைமைச் செயலகத்தில் CM ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன், டெல்லியில் பயிலும் தமிழக மாணவர்களுக்கான விடுதி வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இதைத் தொடர்ந்து, விஜய்யின் பேச்சு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், விஜய்க்கு <<18602926>>தூய சக்தி, தீய சக்தி<<>> என்று அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லித் தந்துள்ளதாக கூறினார். இதுபற்றி தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

News December 19, 2025

கண்களில் கருவளையமா? இதை பண்ணுங்க

image

கண்களுக்குக் கீழ் கருவளையம் ஏற்படுவதற்கு சத்துக்குறைபாடு, தூக்கமின்மை, உடலில் நீரிழப்பு போன்றவை காரணங்களாகும். இதற்கு தீர்வு காண உருளைக்கிழங்கு போதுமானது. காலையில் உருளைக்கிழங்கு ஜூஸ் குடியுங்கள் அல்லது அதன் துண்டுகளை கண்கள் மீது 30 நிமிடங்கள் வைத்திருங்கள். அதில் உள்ள நீர்ச்சத்து கண் வீக்கத்தை குறைப்பதோடு, சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் வழங்குகிறது. வாரத்திற்கு 2-3 முறை இதை முயற்சிக்கலாம்.

error: Content is protected !!