News May 17, 2024
ராம்நாடு: பாம்பனில் கொட்டி தீர்த்த மழை

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மே 14 முதல் கோடை மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சியாகி உள்ளது. இந்நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகளவாக பாம்பன் 29 மிமீ, தங்கச்சிமடம் 18.60 மிமீ, மண்டபம் 11.80 மிமீ, வாலிநோக்கம் 5.60 மிமீ, ராமேஸ்வரம் 5.50 மிமீ மழை பொழிவு பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண் துறை தெரிவித்துள்ளது.
Similar News
News November 23, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (நவ.22) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News November 22, 2025
இராம்நாடு: 10 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

வங்கக்கடலில் உருவாகியிருந்த குறைவான காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்து வந்த நிலையில் காற்றின் வேகம் அதிகமாக திறந்த நிலையில் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு மறுக்கப்பட்டது. அடுத்து 10 நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் உற்சாகத்துடன் மீன் பிடித்து சென்றனர்.
News November 22, 2025
ராமநாதபுரம் வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

ராமநாதபுரம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே<


