News May 17, 2024
கடலூர்: நீச்சல் பயிற்சி வரும் 26ஆம் தேதி நிறைவு

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்பு கடந்த செவ்வாய்க்கிழமை துவங்கியது. இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் இந்த நீச்சல் வகுப்பு வரும் 26ஆம் தேதி நிறைவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 25, 2025
9 தொகுதிகளில் 13088 வாக்காளர்கள்; ஆட்சியர் அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்கள் விவரத்தை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார். அதன்படி திட்டக்குடி 3103, விருத்தாசலம் 2207, நெய்வேலி 1798, பண்ருட்டி 2657, கடலூர் 1352, குறிஞ்சிப்பாடி 2617, புவனகிரி 2008, சிதம்பரம் 1514, காட்டுமன்னார்கோவில் 2323, மொத்தம் 19579 பேர் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
திட்டக்குடி கோர விபத்து; ஓட்டுநர் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 2 கார்கள் மீது அரசு பேருந்து மோதிய கோர விபத்தில் பெண் குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பேருந்தை இயக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மதுரை ஒத்தக்கடைப் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் தாஹா அலி என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
News December 25, 2025
திட்டக்குடி: விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நேற்று இரவு விபத்து நடந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்தை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் சென்று பார்வையிட்டார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


