News May 17, 2024
பரந்தூர்: 661வது நாளாக இரவு நேர போராட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பரந்தூர் கிராமத்தில் 2வது பசுமை விமான நிலையம் அமைவதை எதிர்த்து அப்பகுதியில் வாழும் 13 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மத்திய மாநில அரசை கண்டித்து 661வது நாளாக நேற்று(மே 16) இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள், தொழிற்சாலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Similar News
News January 12, 2026
ஸ்ரீபெரும்புதூரில் அதிரடி கைது!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கட்சிபட்டு, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(25). இவர், கோவர்தன் நகர் அருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ஆனந்தனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
News January 12, 2026
காஞ்சிபுரம்: ஆம்னி பஸ்ஸில் மோசடியா..? உடனே CALL!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., பொங்கலுக்கு ஊருக்கு கிளம்பியாச்சா..? ஆம்னி பஸ்ஸிலோ, அரசு பேருந்திலோ அதீத பண வசூல், மோசடி, இன்ன பிற உதவிகளுக்கான உதவி தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபடி, அரசு பேருந்தின் இயக்கம் குறித்த தகவல்களுக்கு 9445014436, ஆம்னி பஸ் புகார்களுக்கு 18004256151, 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களை அழைக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News January 12, 2026
காஞ்சிபுரத்தில் இருவர் மீது குண்டாஸ்!

காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக புகார்கள் எழுந்த நிலையில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கரன்(25), வண்டலூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(28) ஆகியோரை குண்டாஸில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டுக்கு மதுவிலக்கு போலீசார் பரிந்துரைத்ததையடுத்து, இருவர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது.


