News May 17, 2024
4 கட்ட தேர்தலில் 45 கோடி பேர் வாக்களிப்பு

4 கட்ட தேர்தலில் இதுவரை 45 கோடி பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 23 மாநிலங்களை உள்ளடக்கிய 379 தொகுதிகளில் இதுவரை தேர்தல் நடைபெற்றுள்ளதாகவும், அதில் 66.95% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. விரைவில் மேலும் 3 கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்கு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
Similar News
News January 17, 2026
பிளவுவாத அரசியலை மக்கள் முறியடித்தனர்: அண்ணாமலை

பிராந்தியம், மொழி அடிப்படையில் மக்களை பிளவுபடுத்த முயன்ற எதிர்க்கட்சிகளின் அரசியலை <<18877166>>மும்பை<<>> மக்கள் முறியடித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஒற்றுமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னிறுத்தும் பாஜக தலைமையிலான கூட்டணியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, தேர்தல் பிரசாரத்தின் போது மும்பை சர்வதேச நகரம் என <<18833393>>அண்ணாமலை<<>> கூறியதால் அங்கு பதற்றம் நிலவியது.
News January 17, 2026
CM ஸ்டாலின் கொடி அசைவில் சீறும் காளைகள்!

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார். அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராமநாதபுரத்தில் ₹3 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாரின் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை CM ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
News January 17, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 17, தை 3 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சதுர்தசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.


