News May 17, 2024
நெல்லை: பாட நோட்டுகள் விலை 10-20% வரை சரிவு

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறக்கும்போது பாட நோட்டு புத்தகங்கள் அதிகபட்சம் 10 சதவீதம் வரை உயரும். ஆனால் நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு 10% வரை பாடநோட்டுகள் விலை சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட லாங் சைஸ் நோட்டு இப்போது 25 ரூபாயாக குறைந்துள்ளது. டிராயிங் நோட்டு, கணக்கு நோட்டு உள்ளிட்டவற்றின் விலை 20 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News August 14, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் கைப்பேசி எண் அறிவிப்பு

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News August 14, 2025
மாவட்டத்தில் இன்று இரவு காவல் பணி அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News August 13, 2025
நெல்லையப்பர் கோவில் விருந்துக்கு அழைப்பு

திருநெல்வேலி வரலாற்று சிறப்புமிக்க சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகிற (ஆக.15) வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு கோயில் வசந்த மண்டபத்தில் பொது விருந்து நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர், கலெக்டர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். பொதுமக்கள் பங்கேற்க கோயில் செயல் அலுவலர் இசக்கியப்பன் அழைத்துள்ளார்