News May 17, 2024
எடை குறைப்புக்கு உதவும் பூண்டு

பூண்டு உணவுக்கு சுவை சேர்ப்பது மட்டுமல்லாமல், கொழுப்பு செல்கள் உருவாவதை தடுப்பதன் மூலம் எடை இழப்புக்கு உதவுகிறது. பூண்டு தெர்மோஜெனீசிஸை அதிகரிக்கிறது, இது அதிக கொழுப்புகளை எரிக்கவும், எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. படுக்கைக்கு முன் ஒரு பல் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. பூண்டு வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்களை உடலுக்கு அளிக்கிறது.
Similar News
News October 22, 2025
கருணை அடிப்படையில் அரசு வேலை: இவர்களும் கோரலாம்!

நேரடி வாரிசுகள் தவிர கருணை அடிப்படையில் அரசு வேலைபெற இவர்களும் தகுதியானவர்கள்: *திருமணமான மகள், மருமகன் ஆகியோர் பெண்ணின் பெற்றோரை சார்ந்து வாழ்ந்து வந்தார்கள் என்பதை நிரூபித்தால் பணி நியமனம் உண்டு. *பணிக்கு செல்ல முடியாத நிலையில் திருமணமான மகள் இருந்தால், மருமகனுக்கு வேலை வழங்கப்படும். *திருமணமாகாத ஊழியர், விவாகரத்தானவர், கணவனை இழந்தவர் ஆகியோரின் பெற்றோர் (அ) சகோதர சகோதரிக்கும் பணி வழங்கப்படும்.
News October 22, 2025
DUDE படம் பார்க்க பார்க்க பிடிக்கும்: பிரதீப்

ஹீரோவாக நடித்த 3 படங்களும் ஹிட் அடிக்க, தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக முன்னேறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அவரது ‘DUDE’ படம் குறித்து பேசிய அவர், சிலருக்கு இப்படத்தில் மாற்றுக் கருத்து இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். பார்க்க பார்க்க இப்படம் பிடிக்கும், இது ஒரு REWATCHABLE படமாக இருக்கும் எனவும் பிரதீப் கூறியுள்ளார்.
News October 22, 2025
26 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

சென்னை, செங்கை, காஞ்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம், கோவை, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, குமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தஞ்சை, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், தி.மலை, விருதுநகரில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், பள்ளி மாணவர்கள், பணி முடிந்து வீடு திரும்புவோர் கவனமாய் இருங்கள்.