News May 17, 2024
கோலியால் மட்டுமே அதை செய்ய முடியும்

அனைத்து போட்டிகளிலும் வீரர்கள் ரன்களை குவிப்பது சிரமம் என பஞ்சாப் அணி வீரர் ரைலீ ரூஸோவ் தெரிவித்துள்ளார். அனைத்து டி20 போட்டிகளிலும் நல்ல ஸ்கோரை அடிக்க வேண்டும் என எல்லோரும் எதிர்பார்ப்பதாக ஆதங்கம் தெரிவித்த அவர், தொடர்ந்து ரன்களை கோலியால் மட்டுமே குவிக்க முடியும் என்றார். முன்னதாக பஞ்சாப் – ஆர்சிபி அணிகள் மோதிய போது ரைலீ ரூஸோவ் மற்றும் கோலி இருவரும் சைகைகள் மூலம் மாறிமாறி மோதிக்கொண்டனர்.
Similar News
News October 27, 2025
மீண்டும் திமுக ஆட்சி.. சிரித்தபடி பதிலளித்த OPS

சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த OPS-சிடம் ‘திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என CM கூறி இருக்கிறாரே’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால், திமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக பதிலளித்தார். திமுகவா! என்று அழுத்தமாக கேட்ட உடனே, சுதாரித்துக் கொண்ட அவர், மக்கள் பேசிக் கொள்கிறார்கள்; என் மீது பழியை போட்டுவிடாதீங்க சாமி! என சிரித்துக் கொண்டே கூறினார்.
News October 27, 2025
ஒரு மூத்தவனா சொல்றேன்… கேளுங்க: சீமான்

நடிக்கும்போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு, நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு என்ற போக்கு கொடுமையானது என சீமான் தெரிவித்துள்ளார். வேறு எங்கேயும் நடக்காத இது, இங்கு மட்டும் ஏன் நடக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், அரசியல் என்பது வாழ்வியல் என்று குறிப்பிட்டுள்ளார். தம்பி, தங்கைகளுக்கு ஒரு மூத்தவனாக சொல்கிறேன், அரசியலை படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
News October 27, 2025
வீராங்கனைகள் மீதும் தவறு.. அமைச்சரின் சர்ச்சை கருத்து

இந்தூரில் ஆஸி., கிரிக்கெட் அணி வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதற்கு அவர்களே தான் காரணம் என்பது போல ம.பி., பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா பேசியுள்ளார். இந்த சம்பவத்தில் இருந்து அவர்கள் பாடம் கற்க வேண்டும் என்ற அவர், யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்றது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கிரிக்கெட்டர்கள் பிரபலமானவர்கள் என்பதால், அவர்கள்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.


