News May 17, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மே 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Similar News
News November 8, 2025
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்!

*இந்தப் பொல்லாத உலகில் எதுவுமே நிரந்தரமல்ல, உங்கள் பிரச்சனைகள் கூட இல்லை. *கண்ணாடியே என் சிறந்த நண்பன், ஏனெனில் நான் அழும்போது அது சிரிப்பதில்லை. *இது ஒரு இரக்கமற்ற உலகம், அதை சமாளிப்பதற்கு ஒருவர் இரக்கமற்றவராக இருக்க வேண்டும். *நாம் அனைவரும் நம்மை நாமே இழிவாக நினைக்கின்றோம். அதுதான் இந்த உலகின் பிரச்சனை. *ஆசைப்படுவதை மறந்துவிடு. ஆனால், ஆசைப்பட்டதை மறந்துவிடாதே.
News November 8, 2025
கோவை மாணவி மீது பழிசுமத்த கூடாது: கனிமொழி

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என கனிமொழி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில், அப்பெண் மீது பழிசுமத்துவதை சமூகம் நிறுத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, பாதிக்கப்பட்ட மாணவியின் மீது பழிசுமத்தும் விதமாக திமுக கூட்டணியில் உள்ள கொங்கு ஈஸ்வரன் MLA பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 8, 2025
ஒரே விக்கெட்.. சாதனை படைக்க போகும் பும்ரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டி20-ல் பும்ரா மகத்தான சாதனை படைக்கவுள்ளார். டி20-ல் இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும், 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். பும்ரா டெஸ்டில் 226 விக்கெட்டுகளும், ODI-ல் 149 விக்கெட்டுகளும், டி-20-ல் 99 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். மேலும், டி20-ல் 100 விக்கெட்டுகள் எடுத்த 2-வது இந்தியராக உருவெடுப்பார்.


