News May 16, 2024
அரசுப் பேருந்துகளை கவனமாக இயக்க உத்தரவு

கனமழை பெய்யும் போது நிலைமைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கு, துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கவனிக்கவும், பிற வாகனங்கள் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இடைவெளி விட்டு செல்ல வேண்டும் உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
Similar News
News January 16, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 582 ▶குறள்: எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். ▶பொருள்: நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.
News January 16, 2026
₹9.20 கோடியை வேண்டாம் என சொன்ன வீரர்

இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவு விரிசல் காரணமாக, ₹9.20 கோடிக்கு எடுக்கப்பட்ட BAN வீரர் <<18778953>>முஸ்தஃபிசுர் ரஹ்மானை<<>> KKR விடுவித்தது. கிரிக்கெட் அல்லாத காரணங்களுக்காக அவர் விடுவிக்கப்பட்டதால், இதை சட்டரீதியாக எதிர்கொண்டு இழப்பீடு பெறலாம் என உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கம் முன்வந்துள்ளது. ஆனால், முஸ்தபிசுர் அதை வேண்டாம் என மறுத்ததால், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் BCB இறங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
News January 16, 2026
ஈரான் அரசு கவிழ்ந்தால் இந்தியாவிற்கு பாதிப்பா?

ஈரானில் எந்நேரமும் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. அப்படி நடந்தால் அது இந்தியாவுக்கு பின்னடைவாக இருக்கும். ஏற்கனவே ஆப்கன்-மத்திய ஆசியா-ஐரோப்பா செல்லும் நில வழிப்பாதையை PAK மூடி வைத்துள்ளது. இதனிடையே ஈரானில் பல ஆயிரம் கோடியில் சபஹார் துறைமுகத்தை இந்தியா அமைத்து வருகிறது. எனவே ஷியா ஆட்சியாளர்களின் ஈரான் அரசு கவிழ்ந்தால், அது சன்னி முஸ்லிம்களின் PAK-கிற்கு பலன் தரும்.


