News May 16, 2024

நாளை பேச்சிப்பாறை அணை திறப்பு..?

image

மலையோரப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.  இதனால் பேச்சிப்பாறை அணைக்கட்டில் 42 அடி நீரையும், பெருஞ்சாணி அணையில் 70 அடி நீரையும் தேக்கி வைக்க பொதுப்பணித்துறைக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். இதனால் நாளை பெரும்பாலும் அணையின் மறுகால் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News August 11, 2025

குமரி மாவட்டத்தில் தொழில் தொடங்க பயிற்சி

image

குமரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன உற்பத்தி தொடர்பாக பயிற்சி அளிகப்படுகிறது. பால் பண்ணை, ஆடு, கோழி வளர்ப்பு தொழில் செய்ய விரும்புவோர், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வழங்கப்படும் இந்த 20 நாள் பயிற்சியை பெற்று பயன் பெறலாம். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு. மேலும் தகவலுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை, கால்நடை வளர்ப்பு தொழில் தொடங்க ஆர்வமுள்ள உங்க நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க

News August 11, 2025

குமரி: முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி – ஆட்சியர்!

image

குமரியில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி ஆகஸ்ட்.22ம் தேதி முதல் செப்டம்பர் 12 வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க http://sdat.tn.gov.in (0) http://cmtrophy.sdat.in இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும். இந்தப் போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள்: ஆக.16. மேலும் இப்போட்டியில் இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும் என தெரிவித்துள்ளார்.

News August 11, 2025

குமரி: உங்க வீட்ல கரண்ட் போயிட்டா? இதை பண்ணுங்க…

image

குமரி மக்களே, மழைக்காலத்தில் உங்க வீட்டில் கரண்ட் இல்லையா?, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது? என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே Whatsapp மூலம் 8903331912 / 9445850811 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், CALL செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க நண்பர்களே…

error: Content is protected !!