News May 16, 2024
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏன் திடீர் கொந்தளிப்பு? (3)

2019இல் பாகிஸ்தான் பொருட்கள் மீதான வரியை இந்தியா 200% அதிகரித்தது. இதனால் இந்தியாவுடனான வர்த்தகத்தை பாகிஸ்தான் நிறுத்தவே, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வங்கதேசம் முன்பு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தபோதும் இதேநிலையே இருந்தது. இதைக் கண்டித்து வங்கதேச மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அதேபோல் தற்போதும் நிகழுமா, இல்லையா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.
Similar News
News December 7, 2025
இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படம் எதுன்னு தெரியுமா?

ஒரு குஜராத்தி படம் தான் 2025-ன் மிகப்பெரிய ஹிட் படம் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், குஜராத்தியில் வெளிவந்த ‘Laalo-Krishna Sada Sahaayate’ படம் வெறும் ₹50 லட்சத்தில் எடுக்கப்பட்டு, ₹100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதாவது 200 மடங்கு லாபத்தை ஈட்டி, இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது. ‘காந்தாரா’ ₹850 கோடி வசூலித்தாலும், பட்ஜெட் ₹130 கோடி. சுமார் 7 மடங்கே லாபம். ஆக, 2025-ன் ரியல் ஹிட் இதுவே.
News December 7, 2025
PCOS பிரச்னையால் முடி கொட்டுதா? இதோ solution!

PCOS பிரச்னையால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டு முடி கொட்டுதா? கவலை வேண்டாம். இதனை ஈஸியா குறைக்கலாம். ஆளி விதைகளை ஸ்மூத்தி, தயிர் அல்லது சாலட்களில் சேர்த்து சாப்பிடுங்கள். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதோடு, முடி கொட்டுவதும் குறையும். மேலும் அதிமதுரம் டீ குடிப்பதும் உதவும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். அனைத்து பெண்களுக்கும் SHARE THIS.
News December 7, 2025
திமுகவில் கூண்டோடு இணைந்தனர்

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் அதிமுக, திமுக, தவெக போன்ற கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற அமைச்சர், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.


