News May 16, 2024
மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம்

ஹைதராபாத் நகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்துவருவதால் GT – SRH இடையேயான ஐபிஎல் போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை சற்று குறைந்த பின் டாஸ் போடப்படும் எனத் தெரிகிறது. ஒருவேளை மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் கொடுக்கப்படும். ஏற்கெனவே GT அணியின் கடைசிப் போட்டியும் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 12, 2025
50 வயதை தொட்ட ஆண்களுக்கு எச்சரிக்கை

ஆண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் ஒன்று புராஸ்டேட் கேன்சர். இதன் அறிகுறிகளை முன்பே அறிந்து சிகிச்சை எடுத்தால் பிழைக்கும் வாய்ப்பு 95% வரை இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். இதன் முக்கிய அறிகுறிகள்: 1) உடனே, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு, *சிறுநீர் வெளியேற்றம் மெதுவாக இருப்பது *எலும்புகளில் வலி *விறைப்புத்தன்மை குறைதல். தேவையானவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News September 12, 2025
ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு அதிர்ச்சி

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா சீனாவிடம் தோல்வியை தழுவியது. Hangzhou-ல் நடந்த சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில், சீனா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 4வது, 31வது, 47வது, 56வது நிமிடங்களில் அந்த அணி வீராங்கனைகள் கோல் அடித்தனர். இந்திய அணி ஒரு கோல் மட்டுமே அடிக்க 4-1 என்ற கணக்கில் சீனா வெற்றியடைந்தது. இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற வேண்டுமானால் நாளை ஜப்பான் அணியை வீழ்த்தி ஆக வேண்டும்.
News September 12, 2025
கவிஞர் கண்ணதாசன் பொன்மொழிகள்

*அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே. *அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப் பெற முடியாது, அறிவின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம். *எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. *ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம். அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.