News May 16, 2024

பட்டுப் புழுக்கள் தீ வைத்து அழிப்பு

image

திண்டுக்கல், சாணார்பட்டி, ஒட்டன்சத்திரம், பழநி ஆகிய பகுதிகளில் 4,000 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி நடைபெறுகிறது. இப்பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் உள்ளன. வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் 2500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தரமற்ற பட்டுப்புழு முட்டை, பட்டுக்கூடு விலை சரிவு காரணமாக பழநி பகுதியில் விவசாயிகள் பட்டுப் புழுக்களை தீ வைத்து அழித்து வருகின்றனர்.

Similar News

News August 11, 2025

திண்டுக்கல்: கேட்ட வரம் தரும் 700 ஆண்டு கால கோயில் !

image

திண்டுக்கல்: ஆத்தூர் காமராஜர் அணை அருகே கரடு முரடான மலைப் பாதையில் அமைந்துள்ள சடையாண்டி மலைக்கோயில் 700 ஆண்டுகாலம் பழமையானது. இந்தக் கோயிலுக்கு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். குகைக் கோயிலான இந்தக் கோயிலில் எந்த வேண்டுதலை வைத்தாலும் நிறைவேறும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. திண்டுக்கல் மக்களே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 11, 2025

சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 11, 2025

திண்டுக்கல்: 500 அரசு உதவியாளர் வேலை: APPLY NOW

image

திண்டுக்கல் மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>இங்கே கிளிக்<<>> செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். திண்டுக்கல் மக்களே, வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!