News May 16, 2024
கிளாமர் வேடங்களில் நடிக்க தயார்

கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர் வேடங்களில் நடிப்பேன் என்று நடிகை சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார். தி புரூப் படத்தில் தற்போது நடிக்கும் அவர், கிளாமர் வேடங்களில், நடிப்பதில் அதிக விருப்பமில்லை என்று கூறினார். தி புரூப் படத்தில் கிளாமராக நடித்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், அதே நேரத்தில் முத்த காட்சி, படுக்கையறை காட்சிகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டார்.
Similar News
News December 7, 2025
நாளை பள்ளிகளுக்கு இங்கு விடுமுறை

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை(டிச.8) காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்துள்ளார். இதனிடையே, டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கும் நாளை விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்த விவரங்களை அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
News December 7, 2025
₹610 கோடியை பயணிகளிடம் திருப்பி கொடுத்த இண்டிகோ

விமான பயணிகளுக்கு பெரும் இடையூறாக மாறிய இண்டிகோ சேவை, படிப்படியாக<<18496873>>இயல்பு நிலைக்கு<<>> திரும்பி வருகிறது. இதனிடையே ரத்து செய்யப்பட்ட பயணங்களுக்கான கட்டணத்தையும் அந்நிறுவனம் பயணிகளுக்கு வழங்கியுள்ளது. இதுவரை ₹610 கோடியை அந்நிறுவனம் திருப்பி செலுத்தியுள்ளது. மேலும் மீதமுள்ளவர்களுக்கு இன்று இரவுக்குள் பணம் திருப்பி செலுத்தப்படும் எனவும் இண்டிகோ உறுதி அளித்துள்ளது.
News December 7, 2025
IPL போட்டிகள் பெங்களூருவில் நடக்கும்: DKS உறுதி

சின்னசாமி மைதானத்தில் கூட்ட நெரிசலில் <<16705130>>11 பேர் உயிரிழந்ததை <<>>தொடர்ந்து 2026 IPL போட்டிகள் அங்கு நடைபெறாது என செய்திகள் வெளியாகின. முக்கியமாக புனேவில், RCB அணியின் போட்டிகள் நடக்கும் என கூறப்பட்டது. ஆனால் IPL போட்டிகள் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என கர்நாடக கிரிக்கெட் சங்க உறுப்பினரும் DCM-முமான சிவக்குமார் உறுதி அளித்துள்ளார்.


