News May 16, 2024
புதுக்கோட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டத்தில் கன மழையின் காரணமாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் குறித்தும் அனைத்து துறை பணிகள் குறித்தும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் வெள்ளம் சூறாவளி ஆகியவற்றால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து அவசர கட்டுபாட்டு எண் -1077 அல்லது 04322-222207 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம்
Similar News
News November 5, 2025
புதுகை: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழா பணி

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரில் நவ.10 இல் நடக்கும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகள் குறித்து கலெக்டர் மு.அருணா, மாவட்ட எஸ்பி அபிஷேக்குப்தா ஆகியோர் அவரிடம் விளக்கி கூறினர். இந்த ஆய்வின்போது திமுக வடக்கு மாவட்ட செயலர் கே.கே.செல்லப்பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
News November 5, 2025
புதுகை: பி.எம் கிசான் திட்டம் குறித்து ஆட்சியர் தகவல்

புதுகை மாவட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தில் பயன்பெற தனித்துவ அடையாள அட்டை எண் அவசியம், இத்திட்டத்தில் இதுவரை 88,730 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். 21வது தவணை வரவு வைக்கப்பட உள்ள நிலையில், விவசாயிகள் ஆதார் அட்டை, கணினி சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் ஆகியவற்றை அனைத்து வட்டார வேளாண் உதவிய இயக்குநர் அலுவலகங்களிலும் இ.சேவை மையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
புதுக்கோட்டை: வங்கியில் வேலை APPLY NOW

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degre
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


