News May 16, 2024

காதல் தோல்வி : ஐடி ஊழியர் தற்கொலை

image

போரூர் காரம்பாக்கம், பொன்னி நகர் வல்லார் தெருவில் தனது தாயுடன் வசித்து வந்தவர் தினேஷ் கண்ணா (25). தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், இன்று காலை தனது அறையில் தாயின் புடவையில் தூக்குமாட்டி இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தினேஷ் தான் பணிபுரிந்த இடத்தில் ஒரு பெண்ணை காதலித்து தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News

News May 8, 2025

முதல் 5 இடங்களை பிடித்த அரசு பள்ளிகள்

image

முதல் 5 இடங்களை பிடித்த மாநகராட்சி பள்ளிகள்: நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், புலியூர் மேல்நிலைப்பள்ளி 98.61 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.36 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும், நெசப்பாக்கம் மேல்நிலைப்பள்ளி 97.22 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும், திருவான்மியூர் பள்ளி 95.59 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.

News May 8, 2025

சென்னையின் அடையாளம் ‘எழும்பூர் மியூசியம்’

image

1851ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எழும்பூரில் உள்ள மெட்ராஸ் அருங்காட்சியகம், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகும். இது, கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திற்கு அடுத்தபடியாக 2ஆவது பழமையான அருங்காட்சியகமாகும். சோழர், விஜயநகரம், ஹொய்சலா மற்றும் சாளுக்கியர் உட்பட அனைத்து முக்கிய தென்னிந்திய காலத்தையும் குறிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு கன்னிமாரா பொது நூலகமும் உள்ளது.

News May 7, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” இன்று (01.05.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும். பகிரவும்

error: Content is protected !!