News May 16, 2024
திமுக நிர்வாகி மீது ராதிகா சரத்குமார் புகார்

தன்னைப் பற்றி அவதூறாக பேசிய திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். ஏற்கெனவே ஆளுநர் ரவி மற்றும் குஷ்பூ குறித்து அவதூறாக பேசியதற்காக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ராதிகா குறித்து அவர் பேசிய வீடியோ வைரலான நிலையில், இன்று ராதிகா புகார் அளித்துள்ளார்.
Similar News
News August 5, 2025
அருங்காட்சியகமாக மாறும் ஷேக் ஹசீனாவின் இல்லம்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. ‘ஜூலை புரட்சி நினைவு அருங்காட்சியகம்’ என அதற்கு பெயரிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் இல்லமாக மாறுவதற்கு முன் இது ராஜ்பரி எஸ்டேட் என்று அழைக்கப்பட்டது. வங்கதேசத்தில் பிரதமருக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்ததையடுத்து ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
News August 5, 2025
BREAKING: நாளை மறுநாள் முதல் +1, +2 அசல் சான்றிதழ்

11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் சான்றிதழ் ஆகஸ்ட் 7ஆம் தேதி வழங்கப்படும் என்று தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தேர்வு மையம் மூலமாகவும் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 5, 2025
இரு அவைகளுக்கு 2 மணிவரை ஒத்திவைப்பு

ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் முழக்கமிடும்போது அவையின் மையத்திற்கு CISF படையினர் வந்ததற்கு எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதனால் ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அவை 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் பிஹார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபாவும் ஒத்தி வைக்கப்பட்டது.