News May 16, 2024

5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

வைகை அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணிர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 4 நாள்களுக்கு, விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Similar News

News October 15, 2025

ஸ்டீவ் ஜாப்ஸ் பொன்மொழிகள்

image

*பிரச்சனையை சரியாக வரையறுத்துவிட்டாலே கிட்டத்தட்ட தீர்வு உங்களிடம் இருக்கும். *மற்றவர்களின் கூச்சல் மற்றும் கருத்துக்கள் உங்கள் உட்குரலை மூழ்கடிக்கச் செய்ய அனுமதிக்காதீர்கள். *எல்லாவற்றையும் செய்ய முயற்சிக்காதீர்கள். ஒரு விஷயத்தைச் சிறப்பாகச் செய்யுங்கள். *தோல்விக்குப் பயந்தால் நீங்கள் வெகுதூரம் செல்ல மாட்டீர்கள்.
*உங்களுக்குப் பேரார்வம் இல்லையெனில், உங்கள் இலக்கைவிட்டு வெளியேறிவிடுவீர்கள்.

News October 15, 2025

Pro Kabaddi League: ஒரு புள்ளியில் தோற்ற தமிழ் தலைவாஸ்

image

புரோ கபடி லீக் தொடரில் உபி உத்தாஸ் அணியிடம் 1 புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் தமிழ் தலைவாஸ் புள்ளிகளை குவித்த நிலையில், உபி வீரர்கள் அபாரமாக ஆடி அதை கட்டுப்படுத்தினர். முதல் பகுதியில் தமிழ் வீரர்கள் அதிக புள்ளிகள் எடுத்தாலும், 2-வது பகுதியில் உபி வீரர்களின் கையே ஓங்கியது. இறுதியில் 32-31 புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்தது.

News October 15, 2025

தலைக்கு ₹7 கோடி: பயங்கர மாவோயிஸ்ட் சரண்

image

தலைக்கு ₹7 கோடிக்கும் மேல் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் மல்லஜொலு வேணுகோபால் ராவ், தனது 60 போராளிகளுடன் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா CM பட்னவிஸ் முன்னிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த மாவோயிஸ்ட்டான வேணுகோபால், 76 CRPF ஜவான்கள் கொல்லப்பட்ட 2010 தண்டேவாடா தாக்குதல் உள்பட பல தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்.

error: Content is protected !!