News May 16, 2024
இந்து-முஸ்லிம்களை வைத்து அரசியல் செய்கிறார் மோடி

ரேபரேலியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து சகோதரி பிரியங்கா ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட பொதுமக்களை மோடி நேரில் சந்திக்கவில்லை. ஆனால், தனது பாட்டி இந்திரா காந்தி நடைபயணமாக வந்து மக்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் என்று கூறினார். இந்து-முஸ்லிம்களை வைத்து மோடி அரசியல் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 14, 2026
ராசி பலன்கள் (14.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 14, 2026
₹1,000 வழங்காமல் ஏமாற்றும் திமுக அரசு: நயினார்

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போரை கடந்த நான்கரை வருடங்களாக திமுக அரசு வஞ்சித்து வருவதாக நயினார் சாடியுள்ளார். தனது X பதிவில், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதம் ₹1,000 வழங்கப்படும் என்ற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாட்டுப் பொங்கலுக்கு இன்னும் 3 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த மாதமாவது அந்த தொகையை திமுக அரசு கண்ணில் காட்டுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 13, 2026
நாளை விடுமுறை.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

ஏற்கெனவே பள்ளிகளுக்கு போகி பண்டிகை (ஜன.14) அன்று கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசுக் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ் அறிவித்துள்ளார். இதனால் கல்லூரிகளுக்கும் 5 நாள்கள் பொங்கல் விடுமுறையாகும். எனவே, வெளியூரில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவர்கள் சொந்த ஊர் செல்லத் தயாராகிவிட்டனர்.


