News May 16, 2024
டி20 கிரிக்கெட் போட்டிகளை திரையரங்குகளில் பார்க்கலாம்

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டிகளை நேரலையாக திரையிட PVR Inox நிறுவனம் ஆலோசித்து வருகிறது. நடப்பு ஆண்டில் பெரிய அளவிலான பாக்ஸ் ஆஃபிஸ் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அந்நிறுவனத்தின் வருவாய் கணிசமாக சரிந்துள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், டி20 உலகக்கோப்பை போட்டிகளை திரையிட்டால் கிரிக்கெட் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கலாம் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
Similar News
News November 8, 2025
நொடியில் உயிரை பறிக்கும் பூச்சிகள்

பூச்சிகள் அளவில் சிறியதாக இருந்தாலும், கடிச்சா உயிர்போகும் அளவுக்கு ஆபத்தானவை. நொடியில் உயிரை பறிக்கும் விஷ பூச்சிகளை தெரியுமா உங்களுக்கு? அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, உங்களுக்கு தெரிந்த கொடிய விஷம் கொண்ட பூச்சிகளின் பெயரை, கமெண்ட்ல சொல்லுங்க.
News November 8, 2025
குழந்தைகளிடம் துப்பாக்கியை கொடுக்கும் RJD: PM மோடி

RJD குழந்தைகளை குண்டர்களாக மாற்ற முயற்சிப்பதாக பிஹார் தேர்தல் பரப்புரையில் PM மோடி குற்றம்சாட்டினார். RJD-யின் பிரசார பாடல் மக்களை நடுங்க வைப்பதாகவும், குழந்தைகள் ரவுடிகளாக மாற ஆசைப்படும் அளவுக்கு அவர்களை மாற்றி வைத்துள்ளதாகவும் சாடினார். மேலும் RJD குழந்தைகளின் கையில் துப்பாக்கிகளை கொடுப்பதாகவும், அதேநேரம் பாஜக அவர்களின் கையில் மடி கணினிகளை வழங்குகிறது என்றும் PM மோடி கூறினார்.
News November 8, 2025
அடுத்தடுத்து சதமடித்த ஜுரெல்

தென்னாப்பிரிக்க-A அணிக்கு எதிரான 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா-A பேட்ஸ்மேன் துருவ் ஜுரெல் அசத்தி வருகிறார். முதல் இன்னிங்ஸில் 132* ரன்கள் குவித்த அவர், 2-வது இன்னிங்ஸில் சதம் அடித்தார். முதல் இன்னிங்ஸில் IND-A -255 ரன்னும், SA-A -221 ரன்னும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸில் ஜுரெல் 117*, பண்ட் 48* ரன்களுடன் களத்தில் நிற்க IND-A அணி 355/6 ரன்கள் குவித்துள்ளது.


