News May 16, 2024
300 ஆண்டுகள் பழமையான மரம் சாய்ந்தது!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான அரசமரம் இருந்தது. மரத்தின் அடியே விநாயகர் சிலை வைத்து ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று(மே 15) பெய்த கனமழை காரணமாக மரம் இன்று(மே 16) மரம் சரிந்து விழுந்தது. பழமை வாய்ந்த மரம் சாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 25, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (25.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 25, 2025
கோவை: கடன் தொல்லை தீர இங்க போங்க!

கோவை, பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ளது ஆத்மநாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரரவ், சரபேஸ்வரர் அகியோர் தனித் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர். இங்குள்ள சக்திவாய்ந்த கால சம்ஹார பைரவரை, பூசணி தீபம், பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கிவிடுமாம். கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News December 25, 2025
கோவையில் பாலியல் தொழில்.. சிக்கிய பெண்கள்!

கோவை காந்திபுரம் பகுதியில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக காட்டூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் அப்பகுதியில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு பாலியல் ஈடுபட்ட நமில் மொண்டல் (30) நஸ்மா (31) ஷிமா தாஸ் (28) ஆகியோரை கைது செய்தனர்.


