News May 16, 2024
ராம்நாட்டுக்கு ரெட் அலர்ட்!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (மே.16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
ராம்நாடு: இரு சக்கர வாகன பழுது நீக்குதல் இலவச பயிற்சி

இராமநாதபுரம் சிகில் ராஜ வீதி சாந்த் பீவி காம்ப்ளக்ஸ் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனம் நடத்தும் இருசக்கர வாகனப் பழுது நீக்குதல் பயிற்சி இலவசமாக நடைப்பெற உள்ளது. பயிற்சி ஆரம்பிக்கும் நாள் (நவ -12) பயிற்சி நாட்கள் 30.நேரம்:காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை. பயிற்சி நடைப்பெறும் இடம்: பூமாலை வணிக வளாகம், புது பஸ்ஸ்டாண்ட் அருகில் தொடர்புக்கு: 8825954443.
News November 5, 2025
இராம்நாடு: லஞ்சம் வாங்கிய 3 அதிகாரிகள் கூண்டோடு கைது

பரமக்குடியைச் சேர்ந்த அரசு பதிவு ஒப்பந்ததாரர், ராமநாதபுரம் DRDA சார்பில் டெண்டர் எடுத்த தார் ரோடு வேலை முடித்த தொகையை விடுவிக்கக்கோரி ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவு துணை வளர்ச்சி அலுவலர் வீரசேகரனை (அக்.24) அணுகினார். தொகையை விடுவிக்க ரூ.1.20 லட்சம் வீரசேகரன் கேட்டார். இந்த தொகையை வீரசேகரன், நாகலிங்கம், அருண் ஆகியோர் வாங்கியபோது ராமநாதபுரம் ஊழல் தடுப்பு போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்..
News November 5, 2025
ராம்நாடு: வியக்க வைத்த 8ம் வகுப்பு மாணவனின் நேர்மை

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த பானுமதி தனது கட்டப்பையில் வைத்திருந்த மணி பரிசில் ரெண்டு கிராம் அளவுள்ள தோடு ஒரு கிராம் குண்டுமணி ஒரு ஜோடி கொலுசு ரூபாய் 3000 ரொக்கம் பையோடு தவறவிட்டார். அந்தப் பையை கண்டெடுத்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் கபிலேஷ் திருமுருகன் போலீசாரிடம் ஒப்படைத்தார். அவருக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்தி கௌரவித்தனர்.


