News May 16, 2024
அடுத்த 5 நாள்களுக்கு அதி கனமழை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்காக இன்றும், மே 20ஆம் தேதியும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யவிருக்கிறது. தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யவிருக்கிறது. வடக்கு மாவட்டங்களில் மட்டும் அதிக மழையை எதிர்பார்க்க முடியாது.
Similar News
News March 23, 2026
2 கட்சிகள் மீது அதிருப்தியில் இருக்கிறாரா ஸ்டாலின்?

திமுக கூட்டணியில் உள்ள CPM கடந்த தேர்தலைவிட இந்தமுறை அதிக தொகுதிகளை கேட்கிறது. இதேபோல், விசிகவும் இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்க்கிறது. இந்த கோரிக்கைகளுக்கு திமுக ஒப்புக்கொள்ளாததால் தொகுதி பங்கீட்டை முடிப்பதில், இழுபறி நீடித்து வருகிறது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், எதுவாயினும் தொகுதிகள் எண்ணிக்கையை உயர்த்தும் முடிவில் இல்லை எனவும் கூறப்படுகிறது.
News March 23, 2026
கடன் தள்ளுபடி.. மகிழ்ச்சியான தகவல்!

திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஓரிரு நாள்களில் வெளியாக உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கியுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் EPS அறிவித்துள்ளார். இதனிடையே, திமுக, அதிமுக 2 கட்சிகளும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் பயிர்க் கடன், நகைக்கடன் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
News March 23, 2026
புதுச்சேரியில் அதிமுக மவுசு குறைகிறதா?

புதுச்சேரி NDA கூட்டணியில் அதிமுகவுக்கு 2 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 2021 தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 3 குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 1974, 1977-78 காலகட்டங்களில் அதிமுகவே புதுச்சேரியில் ஆட்சி செய்தது. இந்நிலையில், 2 தொகுதிகள் என்ற நிலைக்கு தற்போது அதிமுக வந்துள்ளதால், புதுச்சேரியில் அக்கட்சியின் தாக்கம் குறைகிறதா என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


