News May 16, 2024
மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே சாணாங்காட்டு தோட்டம் பகுதியில் இன்று காலை தனது விவசாய நிலத்தில் சரஸ்வதி (50) என்பவர் யூகலிப்டஸ் மரத்தின் மேல் மின் கம்பிகள் மோதுவதை எடுத்துவிட முயன்ற போது மின்சாரம் தாக்கியது. அவரை தடுக்க சென்ற அவரது கணவர் தங்கவேல் (58) மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
குமாரபாளையத்தில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

குமாரபாளையம்: வட்டமலை பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் இளங்கோ (46). இவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு மதுபாட்டில்களில் அதிக போதை கொடுக்கும் திரவம் கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
News December 16, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற டிசம்பர்-27 மற்றும் 28 ஆகிய இரு தினங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. நாமக்கல்லில் தூசூர் ஏரி, ராசிபுரத்தில் கண்ணனூர்பட்டி ஏரி, மற்றும் கொல்லிமலையில் வாசலூர்பட்டி ஏரி, உள்ளிட்ட 20 நீர் நிலைகளில் உள்ள பறவைகளை கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெற்று கணக்கெடுக்க பணியை மேற்கொள்ள உள்ளனர். என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.