News May 16, 2024
பாஜக கூட்டணிக்கு மக்கள் பேராதரவு: மோடி

இந்தியாவின் தேர்தலை உலகமே உற்று நோக்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் அசம்கரில் பிரசாரம் செய்த அவர், இந்தியாவின் தேர்தல் குறித்த செய்திகள் முதல்முறையாக உலக செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் இடம்பெறுவதாகக் கூறினார். இதில் இருந்து நமது தேர்தலின் முக்கியத்துவத்தை உணரலாம் எனக் கூறிய அவர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களின் பேராதரவு இருப்பதாக தெரிவித்தார்.
Similar News
News August 15, 2025
J&K மாநில அந்தஸ்து: மோடி கூறும் மந்திரம்

ரத்து செய்யப்பட்ட ஜம்மு & காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீண்டும் கோரிய வழக்கில், பஹல்காம் தாக்குதல் பின்னணியில் அதற்கான சூழலை மத்திய அரசே மதிப்பிடுமாறு நேற்று SC கூறியது. இந்நிலையில், சுதந்திர தின விழாவில் பேசிய மோடி, ‘ஒரே நாடு ஒரே அரசியலமைப்பு’ என்ற மந்திரத்தை ஏற்றபோது பிரிவு 370 என்ற சுவர் இடிக்கப்பட்டது எனக் கூறினார். இது SC அறிவுறுத்தலை மறுப்பது போன்று உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News August 15, 2025
மதச்சார்பின்மை நீடிக்க சுதந்திர தின வாழ்த்துகள்: விஜய்

மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க, அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம் எனவும் தனது X தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக <<17409232>>CM ஸ்டாலின்<<>>, EPS உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
News August 15, 2025
குறைபாடு திறமையில் இல்லை.. சாதனை மங்கை துளசிமதி

இடதுகையின் பிறவிக் குறைபாட்டால் கட்டை விரலை இழந்தார் அந்தப் பெண். எதிர்பாரா விபத்தால் இடதுகை இயக்கமே கட்டுக்குள் வந்த நிலையிலும், பக்கபலமாக நின்றார் அவரது தந்தை. தனது விடாமுயற்சியால் ஆசிய பாரா போட்டிகளில் பேட்மிண்டனில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களையும் வென்று திறமையை நிரூபித்தார். இப்படிப்பட்ட சாதனை மங்கையான துளசிமதி முருகேசனுக்கு TN அரசு ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கி கெளரவித்துள்ளது.