News May 16, 2024
திருவள்ளூர்: தந்தைக்கு உருட்டுக் கட்டை அடி, பல் உடைப்பு

புழல் அருகே புத்தகரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (48). இவருக்கு விநாயகபுரத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்து அவரது மகன் குப்புசாமி நேற்று கோவிந்தனை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி பற்களை உடைத்துள்ளார். இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 28, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் நேற்று இரவு 11 மணி முதல், இன்று காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 27, 2025
திருவள்ளூர்: வி.சி.க பிரமுகர் மீது பாய்ந்த ‘குண்டாஸ்’

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள தனியார் துப்பாக்கித் தொழிற்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை கொண்டாட பணம் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரில், அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே. குமார் மணவாளநகர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் மீது ஆட்சியரின் பரிந்துரைப்படி குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
News August 27, 2025
திருவள்ளூர்: B.Sc, BCA போதும்… மாதம் ரூ.81,000 வரை சம்பளம்

மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.Sc, BCA முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <