News May 16, 2024
விவசாயிகளுக்கு கோவை கலெக்டர் அறிவுறுத்தல்

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அரவை கொப்பரை கிலோ ரூ.111.60க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.120க்கும் விவசாயிகளிடம் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறுமாறு கலெக்டர் அந்த குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
வேரில் உதித்த சுதந்திரப் போராட்டத் தலைவர்கள்

கோயம்புத்தூர், குனியமுத்தூரைச் சேர்ந்த 55 வயது யூ.எம்.டி. ராஜா, காந்திபுரத்தில் நகை பட்டறை நடத்தி வரும் ஒரு கலைஞர். இவர், சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக ஒரு தனித்துவமான கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார். ஒரு மரத்தின் ஆணிவேரைக் கொண்டு, அதில் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட 20 முக்கியத் தலைவர்களின் உருவப்படங்களை மிக நுட்பமாகச் செதுக்கியுள்ளார்.
News August 14, 2025
ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

கோயம்புத்தூர் மாவட்டம், சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ராஜன் குமார், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி அதிகப்படியான பணத்தை இழந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கும், விரக்திக்கும் ஆளான அவர், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 14, 2025
கோவை மாநகராட்சியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (14.08.2025) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற உள்ள இடங்கள் குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 1.கிழக்கு மண்டலம் வார்டு எண் 5, இடம் -பங்காரு திருமண மண்டபம், 2.மேற்கு மேற்கு மண்டலம் (வார்டு எண் 17 & 33) இடம் -சுஹிதா மஹால் திருமண மண்டபம், டி.வி.எஸ் நகர் கவுண்டம்பாளையம்.