News May 16, 2024
திண்டுக்கல்: மழைநீரில் சிக்கிய கார்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று மேகமூட்டமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை பெய்த கனமழையால் திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து அப்பகுதியில் சென்று கார் மழைநீரில் செல்லமுடியாமல் சிக்கியது. இதையடுத்து அந்த வழியாக சென்ற மற்றவர்கள் காரை தள்ளிவிட்டு வெளியேற்றினர்.
Similar News
News December 4, 2025
திண்டுக்கல்லில் வசமாக சிக்கிய கொள்ளையன்!

திண்டுக்கல் இந்திரா நகரில் வசிக்கும் மாரிமுத்து, சொப்னா தேவி வீட்டில் பூட்டு சாவியை எடுத்து பணம், நகை கொள்ளை அடித்ததாக திண்டுக்கல் வடக்கு காவல் துறையினர் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில், எஸ்.பி. பிரதீப் அவர்களின் உத்தரவின் கீழ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவலர்கள் சிசிடிவி காட்சி தனிப்படை காவலர்கள் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கரூர் சதீஸ் குமார் என்பரை கைது செய்தனர்.
News December 4, 2025
நத்தம் அருகே சோகம்..கூலித்தொழிலாளி பலி!

நத்தம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று டூவீலரில் வத்திபட்டிக்கு சென்றுவிட்டு மதுரைதுவரங்குறிச்சி நான்கு வழிச்சாலையில், விளாம்பட்டி பள்ளிவாசல் பகுதியில் வந்தபோது, அவரது டூவீலரும் எதிரே வந்த காரும் மோதியது. இதில்,படுகாயம் அடைந்த சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 4, 2025
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மாவட்ட வன அலுவலராக நாக சதீஷ் கிடிஜாலா இன்று பொறுப்பேற்றார். இதையடுத்து ஒட்டன்சத்திரத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் மாவட்ட வன பாதுகாவலர் முகமது சகாப் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.


