News May 16, 2024
தைவான் எல்லையில் சீனாவால் பதற்றம்

தைவான், சீனா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் சீன ராணுவத்தின் அடாவடி நடவடிக்கைகளை தினசரி அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்று அதிகாலை 6 மணியளவில் 27 சீன போர் விமானங்களும், 7 ராணுவ கப்பல்களும் எல்லையை கடந்து வந்ததாக தெரிவித்துள்ளது. இதனால், இருநாட்டு எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
Similar News
News August 26, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

நேற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹74,840-க்கும், கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹9,355-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களுக்கு மேலாக உயர்ந்து வந்த வெள்ளி விலை இன்று கிராமுக்கு ₹1 குறைந்து ₹130-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,30,000-க்கும் விற்கப்படுகிறது.
News August 26, 2025
இந்தியா மீதான 50% வரி..இடியை இறக்கிய USA

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீதான 25% கூடுதல் வரி நாளை(ஆக.27) முதல் அமலுக்கு வருவதாக USA அறிவித்துள்ளது. இது வந்தால் ஜவுளி ஏற்றுமதி, ரத்தினங்கள் ஏற்றுமதி, மருந்து பொருள்களை தயாரிப்பு, செல்போன் உற்பத்தி உள்ளிட்ட துறையை இது பாதிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றன. வரி உயர்வு குறித்து USA உடன் பேச்சுவார்த்தை நடக்கவிருந்து, கடைசி நேரத்தில் அது ரத்தானது குறிப்பிடத்தக்கது.
News August 26, 2025
மூலிகை: அருகம்புல்லின் அற்புத மருத்துவ குணங்கள்!

➤அருகம்புல் சாறு உடல் வெப்பத்தை சீராக வைக்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது. தொற்று நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிறது.
➤சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்துவும் அருகம்புல் சாறு உதவும்.
➤நரம்புத் தளர்ச்சி பிரச்னைகளுக்கும் அருகம்புல் சாறு குடிப்பது சிறப்பான பலன்களை அளிக்கும்
➤அருகம்புல் சாறு உடலில் இன்சுலினை அதிக அளவில் சுரக்கச் செய்வதால், சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.