News May 16, 2024
சென்னையில் நாய் கடித்ததில் 6 வயது சிறுவன் படுகாயம்

சென்னையில் தினசரி நாய் கடி சம்பவம் அரங்கேறி வருகிறது. இன்று காலை நடைபயிற்சிக்காக அழைத்து வந்த வளர்ப்பு நாய், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் ஹரிஷ்குமாரின் மார்பு, கை, கால்களில் கடித்து குதறியுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் சிறுவனை மீண்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பான புகாரில், வளர்ப்பு நாயின் உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News August 8, 2025
காந்தாரா பட நடிகர் மரணம்!

பிரபல நடிகர் பிரபாகர் கல்யாணி, வீட்டில் மயங்கி விழுந்து காலமானார். இவர் 2 நாள்களுக்கு முன் தான் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘காந்தாரா’ படத்தின் மூலம் பெரும் பிரபலமடைந்த பிரபாகர், மேடை நாடகங்களிலும் மக்களை பெருமளவில் கவர்ந்தார். முன்னதாக, காந்தாரா 1’ படத்தில் நடித்து வந்த 3 நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருந்தது.
News August 8, 2025
மோடிக்கு நான் சொல்லித் தரேன்… கிளம்பிய நெதன்யாகு

டிரம்ப்பை எப்படி டீல் செய்வதென்று PM மோடிக்கு சில ஆலோசனைகளை வழங்கப் போவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். மோடியும் டிரம்ப்பும் தனக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதால், இதை செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இந்தியா வரவுள்ளதாக தெரிவித்த அவர், இந்திய- அமெரிக்க உறவு மிகவும் உறுதியானது என்றும், வரிவிதிப்பு விவகாரத்துக்கு இருநாடுகளும் தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
News August 8, 2025
விநாயகர் சதுர்த்தி.. இவற்றுக்கெல்லாம் தடை!

விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்ட் 27) கொண்டாட்டம் தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, *பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்ட சிலைகளை பயன்படுத்த வேண்டும். *சிலைகளை அலங்கரிக்க பிளாஸ்டிக், தெர்மோகோல் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்த தடை. *ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பூஜை பொருள்களை பயன்படுத்த அனுமதி இல்லை. *அனுமதியில்லாத இடங்களில் சிலைகளை கரைக்க கூடாது. SHARE IT.