News May 16, 2024
கிருஷ்ணகிரி: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

பா்கூர்: முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் மகாபாரத திருவிழா நடைபெற்றது. 13 நாள்கள் தெருக்கூத்து நாடகமும் நடந்தது. இதில் கடந்த 18 நாள்களாக நடந்து வந்த அக்னி வசந்த உற்சவ விழாவின் கடைசி நாளான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோயில் அருகே 40 அடி நீளத்தில் களிமண்ணால் துரியோதனன் உருவம் வடித்து பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்வை, கலைஞா்கள் நடித்துக்காட்டினா்.
Similar News
News July 7, 2025
கிருஷ்ணகிரி நாளை மின் தடை 2/2

முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை ஆகிய இடங்களில் நாளை(ஜூலை.08) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. எனவே வீட்டு வேலைகளை அதன்படி மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் பகுதி மக்களுக்கு இந்த செய்தியை தெரியப்படுத்துங்க
News July 7, 2025
கிருஷ்ணகிரியில் நாளை மின் தடை 1/2

கிருஷ்ணகிரியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக முக்கிய இடங்களில் நாளை (ஜுலை.08) மின் தடை ஏற்பட உள்ளது. அதன்படி போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை. பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், <<16972858>>தொடர்ச்சி<<>> ஷேர் பண்ணுங்க
News July 7, 2025
சாலையில் பயங்கர விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி பகுதியிலிருந்து காவேரிப்பட்டிணம் செல்லும் சாலை இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் (ஜூலை-6) இரவு 8 மணி அளவில் குடிபோதையில் டாட்டா ஏசி வாகனத்தை இயக்கி வந்த இளைஞர் எதிரே வந்த இரண்டு சக்கர வாகனம் மீது மோதிய பயங்கர விபத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர்களுக்கு கை கால் முடிவு ஏற்பட்டது. விபத்து குறித்து நாகரசம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.