News May 16, 2024
ஆரஞ்சு கலர்: கட்டுப்பாட்டு எண் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக 19ஆம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 18 மற்றும் 19ஆம் தேதி “ஆரஞ்ச் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 அல்லது 04633 290548 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 18, 2025
தென்காசி: விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த ராஜ் ( 38). கூலி தொழிலாளியான இவர் ஆலங்குளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆலங்குளம் பஸ் நிலையம் எதிரே சாலையை கடக்கும்போது ஒரு கார் எதிர்பாராத விதமாக ஆனந்தராஜ் மீது மோதியது. இதில் இவர் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுனரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
News December 18, 2025
குற்றாலநாதர் கோயில் திருவாதிரை திருவிழா நிகழ்ச்சிகள் அறிவிப்பு

குற்றாலத்தில் அமைந்துள்ள திருகுற்றால நாதர்- குழல்வாய்மொழி அம்பாள் திருவாதிரை திருவிழா நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 25ம் தேதி அதிகாலை 5.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. 29ம் தேதி உள்பிரகாரத்தில் நடராஜர் பஞ்சமூர்த்திகள் கேடயத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும் ஜனவரி 2 காலை 9 மணிக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாரதனை நடைபெறும் 3ம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு தாண்டவ தீபாராதனை நடக்கும்.
News December 18, 2025
தென்காசியில் டிச.26 விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 26.12. 2025 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.


