News May 16, 2024
முட்டை விலை வரலாறு காணாத உயர்வு

கோழி முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ₹5.70ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் முட்டையின் சில்லரை விலை ₹7 முதல் ₹8 வரை உயர்ந்துள்ளது. 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முட்டை விலை ₹5.80ஐ தொட்டது. தற்போது விலை ₹5.70ஐ தொட்டிருக்கும் நிலையில் விரைவில் வரலாற்று உச்சத்தை தொடும் என்று பண்ணையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Similar News
News October 18, 2025
உடல் எடை குறைய காலையில் இந்த Exercise பண்ணுங்க!

ஜம்பிங் ஜாக்ஸ் செய்வதால், உடல் எடை குறைவது, இதய ஆரோக்கியமும் மேம்படுவது, தசைகள் & எலும்புகள் வலு பெறுவது போன்ற நன்மைகள் கிடைக்கின்றன ✦செய்முறை: கால்களுக்கு இடையே கொஞ்சம் இடைவேளைவிட்டபடி, கைகளை ஒன்றாக வைத்து நிற்கவும் ✦கால்களை மடக்காமல், நன்கு விரித்து குதிக்கவும் ✦அப்போது, கைகளை தலைக்கு மேல் கொண்டு சேர்க்கவும் ✦பிறகு, பழைய நிலைக்கு திரும்பவும். துவக்கத்தில் 2 செட்களாக 15 விநாடிகள் செய்யலாம்.
News October 18, 2025
பெண்களை குறிவைத்து வியூகம்: திமுகவுக்கு செக்?

தேர்தலில் பெண்களின் வாக்குகளை கவர, விடுபட்ட மகளிருக்கு உரிமை தொகை வழங்க திமுக முடிவு செய்துள்ளது. அதை முறியடிக்க பாஜக வியூகம் அமைத்து வருகிறது. டாஸ்மாக், சாராய உயிரிழப்புகள், போதைப்பொருள், சட்டம் ஒழுங்கு, EX அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சுக்களை தொகுத்து வீடுவீடாக சென்று துண்டறிக்கை கொடுத்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. தீபாவளிக்கு பிறகு இப்பிரசாரம் தொடங்க உள்ளது.
News October 18, 2025
BREAKING: கடும் சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 7 காசுகள் சரிந்து ₹88.03 ஆக உள்ளது. இதனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள், ரூபாய் சரிவின் காரணமாக இழப்பை சந்திக்க நேரிடும். மேலும் அவர்களின் வெளிநாட்டு பயணங்கள், கல்விச் செலவுகள் அதிகரிக்கும். அத்துடன் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருள்களிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.