News May 16, 2024
பட்டுக்கோட்டையில் 16 செ.மீ மழை

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
Similar News
News October 26, 2025
தஞ்சை: அனைத்து டிபிசிகளுக்கும் விடுமுறை ரத்து!

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாலும் – ஏற்கனவே நெல்லை கொண்டு வந்து விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் காத்திருப்பதாலும் இன்று (அக்.26) ஞாயிற்றுக்கிழமை அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் விடுமுறையின்றி செயல்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
News October 26, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் நியமனம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News October 25, 2025
விவசாயிகளை நேரில் சென்று ஆறுதல் கூறிய மாநில தலைவர்

தஞ்சாவூர் ஆலக்குடி பூதலூர் ஒன்றியம் மற்றும் நேரடி கொள்முதல் நிலையங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மூட்டைகளை, பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும் விவசாயிகளின் அரணாக என்றும் பாஜக துணை நிற்கும் உடனடியாக வீணான நெல்லுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதில் பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


