News May 16, 2024

கோவையில் 5 நாட்களுக்கு மழை!

image

கோவையில் 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. அதன்படி நேற்று(மே 15) 29 மிமீ, இன்று(மே 16) 4 மிமீ, 17ல் 32 மிமீ, 18ல் 30 மிமீ, 19ம் தேதி 34 மிமீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக 29-33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 20-23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 27, 2025

கோவை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை!

image

கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில் “இந்திய குடியரசு துணைத் தலைவர் நாளை கோவை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதனால் கோவை மாவட்டத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

News October 27, 2025

கோவையில் நிரம்பிய 21 குளங்கள்!

image

கோவையில் நொய்யல் ஆற்றை ஆதாரமாகக் கொண்டு பேரூா் பெரியகுளம், குனியமுத்தூா் செங்குளம்,கோளராம்பதி, சொட்டையாண்டிகுட்டை, முத்தண்ணன்குளம் உள்ளிட்ட 24 குளங்கள் உள்ளன. தற்போது பெய்து வரும் வட கிழக்கு பருவ மழையின் காரணமாக நீா்வரத்து அதிகரித்து வருவதால் பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன. கோளராம்பதி குளம், நரசாம்பதி குளம், வாலாங்குளம், வேடபட்டி குளம், உக்குளம், புதுக்குளம் உள்ளிட்ட 21 குளங்கள் நிரம்பியுள்ளன.

News October 26, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (அக்.26) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

error: Content is protected !!