News May 16, 2024
தமிழகத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ., மழை

கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 10.3 செ.மீ., மழை பதிவாகியிருக்கிறது. மயிலாடுதுறையில் 5.1 செ.மீ., அருப்புக்கோட்டையில் 5 செ.மீ., மதுரையில் 4.7 செ.மீ., நாமக்கல், நாகை மாவட்டம் கொள்ளிடம், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் 3 செ.மீ., என மழை பதிவாகியிருக்கிறது. கோவை, குமரி, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் குறிப்பிடும்படியான மழை பெய்திருக்கிறது.
Similar News
News October 27, 2025
இருளில் ஒளிரும் 10 உயிரினங்கள்

ஆழ்கடல் உயிரினங்கள் முதல் காட்டுப் பூச்சிகள் வரை, சில உயிரினங்கள் இயற்கையாகவே இருட்டில் ஒளிர்கின்றன. இதனை பயோலுமினசென்ட் உயிரினங்கள் என்று அழைக்கின்றனர். இந்த ஒளிரும் அதிசயங்கள் மாயாஜால காட்சியாக தோன்றுகின்றன. என்னென்ன உயிரினங்கள் இரவில் ஒளிரும் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்தது எது? கமெண்ட் பண்ணுங்க.
News October 27, 2025
வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தை நிலவரம்

சர்வதேச நிலையற்ற தன்மை, அமெரிக்கா – சீனா வர்த்தக மோதல் உள்ளிட்ட காரணிகளால், கடந்த வார இறுதியில் இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. ஆனால், வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன. அதன்படி, மும்பை குறியீட்டு எண் Sensex, 566.96 புள்ளிகள் உயர்ந்து 84,778 புள்ளிகளுடனும், தேசிய குறியீட்டு எண் Nifty50, 170.90 புள்ளிகள் உயர்ந்து 25.966- புள்ளிகளுடனும் நிறைவடைந்துள்ளன.
News October 27, 2025
இன்று இரவு 12 மணி முதல் மொத்தமாக மாறுகிறது

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 2-ம் கட்ட SIR மேற்கொள்ளப்படும் என ECI அறிவித்துள்ளது. அதனால், இன்று நள்ளிரவு 12 மணி முதல் வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்வது நிறுத்தப்படும். அதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு Enumeration Form வழங்கப்படும். அதில் உள்ள விவரங்கள் 2003 வாக்காளர் பட்டியலோடு ஒத்துபோனால், மேலதிக ஆவணங்களை சமர்பிக்க தேவையில்லை என்றும் கூறியுள்ளது.


