News May 16, 2024

திருச்சியில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 16) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News December 9, 2025

திருச்சி அருகே 50 சவரன் நகை கொள்ளை

image

செங்காட்டுபட்டி அடுத்த கீரம்பூர் பகுதியில் வசிக்கும் சகோதரர்களான சசிகுமார், சிவகுமார் ஆகியோரது வீடுகளில் பூட்டை உடைத்து ஆளில்லாத நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள், 50 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News December 9, 2025

திருச்சி மாவட்ட மக்கள் கவனத்திற்கு..

image

திருச்சி மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம். ஷேர்

News December 9, 2025

திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

திருச்சி அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். https://tiruchirappalli.nic.in என்ற தலைப்பில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லம், ஆவூர் சாலை, மாத்தூர், திருச்சி என்ற முகவரிக்கு தபால் மூலமாக வரும் 22 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!